ஆப்கானிஸ்தான் பல மனித நேய சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது ஆண்டில் வசிக்கும் ஒருவர் தனது வாழ்கை சிக்கலை பற்றி மனம் திறந்து பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வறுமையில் கிட்டத்தட்ட 70 குழந்தைகளை பெற்றெடுத்து தற்போது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தவித்து வரும் நபரின் மனக்குமுறலை உலகிற்கு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முகமது சாதெக் என்ற நபர் நான்கு மனைவிகளை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்தான் இவர்களது வீட்டில் வருமானம் ஈட்டும் ஒரே ஆள். சாதெக் தான் ஒரு கார் விற்பனையகத்தில் பணிபுரிவதாகவும், அங்கு விற்கும் ஒவ்வொரு காருக்கும் 1,000 ஆப்கானிகள் (சுமார் $15) சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் தற்போது 58 குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்துள்ளனர். இவரது தற்போதைய இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களே ஆகிறது.
அந்தக் குடும்பமானது, முறையான கதவுகளோ ஜன்னல்களோ இல்லாத மண் வீடுகளில் கடுமையான வறுமையில் வாழ்ந்துவருகிறது. மெல்லிய திரைச்சீலைகளில் சிறிதளவு பாதுகாப்புடன் வாழ்ந்துவருகின்றனர். மேலும் விறகு வாங்க வசதியில்லாததால், சமையலுக்குத் தீ மூட்ட பெரும்பாலும் காகிதமே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில், குழந்தைகள் பசியுடனே உறங்கச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு காலணிகள் வாங்க வசதியில்லாததால் பலர் வெறுங்காலுடன் நடக்கின்றனர்.
மேலும், அவரது குழந்தைகளின் பெயர்களைக்கூட அவரால் நியாபகம் வைத்து கொள்ளமுடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை 'குழந்தை' அல்லது 'மகனே' என்றே அவர்களை அழைப்பதாக தெரிவித்துள்ளார். இவரது மனைவிகளை மிக இளம்வயதிலேயே திருமணம் செய்துள்ளதால் அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றியோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதை குறித்தோ எந்தவித விழிப்புணர்வும் இல்லை என்று அவரை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் குழந்தை திருமணம் என்பது சாதாரண ஒன்றாக பார்க்கப்படும் அவலநிலை இருப்பதால் அவருக்கு பிறந்த குழந்தைகள் கூட இருந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாதெக்கின் குழந்தைகளில் சிலர் காசநோய், கக்குவான் இருமல் மற்றும் தட்டம்மை ஆகியவற்றால் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமைகளாக இருக்கட்டும், பொருளீட்டும் உரிமைகளோ எதுவுமே அதாவது சராசரி அடிப்படை கூட மறுக்கப்படுவதால் அதனால் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது சூழ்நிலைகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்த சாதெக், "அடிப்படை உணவை வாங்குவதற்குக் கூட அவர்கள் சிரமப்படுவார்கள் என்று தெரிந்திருந்தால், இத்தனை குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்படி, அந்நாட்டில் ஒவ்வொரு நான்கு பேரில் மூன்று பேர் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.