உலகம்

இம்ரான்கான் எந்நேரமும் கைது செய்யப்படுவார் - பாகிஸ்தான் அரசு தீவிரம்! ஏன் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் தற்போதைய பிரதமர் ஷெபாஷ் ஷெரீபுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அரசுக்கு எதிராக பேரணி நடத்த முன்வருமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இம்ரன்கனுக்கு எதிராக வழக்கு பதியபட்டுள்ளது. பிளாஸ்பமி சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருப்பதால் இம்ரான்கான் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்  என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.