உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் ஆட்சியை பிடித்தார்...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானின் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

Malaimurasu Seithigal TV
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
பெரும் வன்முறைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. தேர்தலின் போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.