உலகம்

இவ்வளவு பெரிய போருக்கு நடுவில்.. பதுங்குகுழியில் திருமணம் செய்து கொண்ட உக்ரைன் தம்பதி..!

Malaimurasu Seithigal TV

உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.  இந்த மோதலில் இருதரப்பில் இருந்தும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் ஒடெசா நகரில் உள்ள வெடிகுண்டு இல்லத்தில் விமானத் தாக்குதல் சைரன்கள் காதில் ஒலிக்க ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன.. 

முன்னதாக, தெற்கு நகரமான கெர்சானை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.