உலகம்

ஆப்கானுக்கு இந்தியா உதவ வேண்டும்... ஆப்கான் எம்.பி. வேண்டுகோள்...

தலிபான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவர்கள் என ஆப்கானிஸ்தான் எம்.பி. மரியம் சோலைமான்கில் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகி வருவதை அடுத்து, அங்கு தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளதால், அந்நாடு இந்தியாவின் உதவியை கோரியுள்ளது.

இந்தநிலையில் அங்கு நிலவும் தற்போதைய நிலை குறித்து பேசிய மரியம் சோலைமான்கில், பயங்கரவாதிகளுக்கு என  பாகிஸ்தான் நிதி திரட்டி, அவர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலிபான்கள் நல்லவர்கள் கிடையாது என கூறிய அவர், அவர்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும் தெரிவித்தார். ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.