உலகம்

துபாய் விமான கண்காட்சி - இந்திய விமானங்கள் சாகசம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ள விமான கண்காட்சியில் இந்திய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

Malaimurasu Seithigal TV

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ள விமான கண்காட்சியில் இந்திய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விமான கண்காட்சி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வரும் 18ஆம் தேதி வரை‌ மொத்தம் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன.

சவுதி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாகச குழுவினருடன், இந்திய விமானப்படையும் சாகச நிகழச்சிகளில் பங்கேற்கிறது.

அதன்படி துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் இந்திய விமானப்படையின் சாரங்கு குழுவின் துருவ் ரக நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகுரக போர் விமானமான தேஜாஸ்  ஆகியவை தங்களது சிறந்த பறக்கும் திறன்களை வெளிப்படுத்தின.