உலகெங்கிலும் இருக்கும் பெரு முதலாளிகள் தங்களிடம் இருக்கும் கூடுதல் மாற்றம் கணக்கில் காட்டாத பணத்தை சொந்த நாட்டில் வரி செலுத்தாமல் தப்பிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கக்கூடிய வங்கிகளில் தான் டெபாசிட் செய்து வைப்பார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள் என பெரும்பான்மையானவர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை போட்டு வைக்கின்றனர். சுவிட்சர்லாந்தில் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு அவர்களிடம் கணக்கு வழக்கு வைத்திருக்கு நபர்களின் தரவுகள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.
நமது படங்களில் நாம் பலமுறை பார்த்திருப்போம், இங்கே உள்ள பணத்தை எல்லாம் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நபர் சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருப்பார், கதநாயகன் மீட்டு தாய்நாட்டுக்கு கொண்டுவருவார். அப்படி உண்மையிலே இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு நம்மை தலை சுற்ற வைத்திருக்கிறது.
இந்நிலையில் சுவிஸ் தேசிய வங்கி ஆண்டறிக்கையை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 35 பில்லியன் பிராங்க் (சுவிஸ் கரன்சி) அளவுக்கு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.37,600 கோடியாகும். கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர்கள் செய்துள்ள அதிகபட்ச முதலீடாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.20,700 கோடியாக இருந்த இந்தியர்களின் சுவிஸ் வங்கிகளில் பணம் இருப்பு 2021 இல்கிடத்தட்ட 50% அதிகரித்திருக்கிறது. இது 2021-இல் தனிநபர் பண இருப்பு, நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சார்ந்த இருப்பு உட்பட அனைத்துப் பிரிவுகளின் கீழான பணம் புதிய உச்சமாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.