உலகம்

இந்தியாவின் நெருங்கிய நண்பர் மர்ம நபரால் சுடப்பட்டார்:

Malaimurasu Seithigal TV

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாராவில் சுடப்பட்டார். உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்த அவர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஷின்சோ அபேவை சுட்டது யார்?
 
ஷின்சோ அபேவை சுட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சுடப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  ஷின்சோ அபே கைத்துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபேயின் தற்போதைய நிலை:

67 வயதான அபே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இரண்டு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள்  தெரிவித்துள்ளதுள்ளனர்.  மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்ட ஷின்சோ அபேயின் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. சந்தேக நபர் மீது தற்போது கொலை முயற்சி குற்றச்சாட்டு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.