உலகம்

ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநித்துவம்?!!

Malaimurasu Seithigal TV

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் சம பிரதிநிதித்துவம் என்பது, 1979ல் நடந்த பொதுச் சபையின் நிகழ்ச்சியிலேயே சேர்க்கப்பட்டது.  நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின்  சீர்திருத்தம் எவ்வளவு காலம் நிறுத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக பிரதிநிதித்துவப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று G-4 நாடுகள் எச்சரித்துள்ளன.  

இந்த நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏற்கனவே உள்ள மோதல்களை திறம்பட கட்டுப்படுத்த  உதவும் என்று கூறியுள்ளது.  ஜி-4 நாடுகளில் இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். 

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறுகையில், 1979-ல் நடந்த பொதுச் சபையின் நிகழ்ச்சியிலேயே இந்தியாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சம பிரதிநிதித்துவம் சேர்க்கப்பட்டது எனவும்  நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது எனவும் கூறினார்.  

மேலும் பாதுகாப்பு கவுன்சில் அதன் சாசனப் பொறுப்பிற்கு ஏற்ப செயல்பட வேண்டிய தருணம் இது என்றும் அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய கம்போஜ் , UNSC இன் உறுப்பினர்களை அதிகரிக்காமல், அதன் இலக்குகளை அடைய முடியாது எனவும் உலகெங்கிலும்  மோதல்கள் பெருகிய நிலையில் சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய சவால்களை திறம்பட நிர்வகிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

-நப்பசலையார்