உலகம்

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை எம்மோடு தொடர்புபடுத்துவதா? இஸ்லாமிய நாடு மறுப்பு!

Malaimurasu Seithigal TV

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மும்பையில் பிறந்த காஷ்மீரி முஸ்லிம் ஆவார். இஸ்லாமிய சமயத்தை அவமதிக்கும் வகையில் இவரது எழுத்துகள் இருப்பதால் இவர் பல்வேறு இஸ்லாமிய தரப்பினராலும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.

சர்ச்சைக்குரிய புத்தகம்

கடந்த 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான தி சடானிக் வெர்சஸ் என்ற புத்தகம் இஸ்லாமிய உலகில் உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத. ஏனெனில் சிலர் முகம்மது நபியை கண்ணியக் குறைவாக சித்தரித்திருப்பதாக கருதினர்.

முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட பல நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. ஈரான், இந்தியா, பங்களாதேஷ், சூடான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, கென்யா, தாய்லாந்து, தான்சானியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வெனிசுலா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 13 நாடுகள் இந்த புத்தகத்தை தடை செய்தது.

சல்மான் ருஷ்டி விளக்கம்

எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, 22 ஜனவரி 1989 அன்று, ருஷ்டி தி அப்சர்வர் செய்த்தாளில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் முகமது நபியை "உலக வரலாற்றின் சிறந்த மேதைகளில் ஒருவர்" என்று அழைத்தார். இந்த நாவல் "மதத்திற்கு எதிரான நாவல் அல்ல. இருப்பினும், இடப்பெயர்வு, அதன் அழுத்தங்கள் மற்றும் மாற்றங்கள் பற்றி எழுதும் முயற்சி" என்று அவர் கூறினார்.

மரண தண்டனை விதித்த ஈரான் தலைவர்

ரானின் அரசியல் மற்றும் சமயத் தலைவரான கொமெய்னி தி சடானிக் வெர்சஸ் புத்தகம் இஸ்லாமிய சமயத்திற்கு எதிரானது என தெரிவித்தார். மேலும் கடந்த 1989 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி கொல்லப்பட வேண்டியவர் என்று அவருக்கு மரண தண்டனையும் விதித்தார்.

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்

சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கொலை மிரட்டல்களும் வந்து கொண்டு தான் இருந்தது. இதற்கு முன்பு பல அவர் மீதான சில கொலை முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆகஸ் 12, 2022 அன்று அவரை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அதனால் மிக மோசமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சில் மேற்கத்திய ஊடகங்கள் ஈரான் நாட்டின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.

ஈரான் அரசு விளக்கம்

ருஷ்டி மீதான தாக்குதலில் ஈரான் நாட்டிற்கு தொடர்பு இல்லை என்று ஈரானிய அரசாங்க அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். இது சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்த அந்நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ கருத்தாகும்.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். அமெரிக்காவில் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் சம்பவத்தில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரும் பழி மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதவில்லை. இது தொடர்பாக ஈரான் மீது குற்றம் சுமத்த யாருக்கும் உரிமை இல்லை என அவர் தெரிவித்தார்.