உலகம்

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் உக்ரைன் காரணமா....!!!!

Malaimurasu Seithigal TV

ரஷ்யாவின் பிரபல அரசியல் சித்தாந்தவாதியான அலெக்ஸாண்டர் டுகினின் மகள் சனிக்கிழமை ஓட்டி சென்ற கார் வெடித்ததில் அவர் கொல்லப்பட்டதாக ரஷ்யா புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் இந்த வெடிகுண்டு விபத்துக்கு உக்ரைனின் ஒரு ரகசிய அமைப்பு தான் காரணம் என தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  தாக்குதல் நடத்திய பெண்ணும் அவருடைய மகளும் ஜீலை மாதமே ரஷ்யாவிற்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியதாக ரஷ்யா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  டுகினின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள ஒரு மாத காலம் செலவிட்டதாக தெரிகிறது. 

தாக்குதல் முடிந்த பின்னர் தாயும் மகளும் மாஸ்கோவிலிருந்து எஸ்டோனியாவிற்கு தப்பி சென்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரை ரஷ்யாவின் இக்குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யானது எனக்கூறி மறுத்துள்ளது.