டுவிட்டரில் எழுத்துக்கள் அடங்கிய பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள், GIF என்று சொல்லக்கூடிய பதிவுகளை இடலாம். இதற்கு வரம்புகள் உள்ளன.
எழுத்துக்கள் மூலம் பதிவிடப்படும் பதிவுகள் 280 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதேபோல் 4 புகைப்படங்கள், ஒரு GIF அல்லது ஒரு வீடியோ வரை டுவிட்டரில் பதிவிடலாம்.
இந்த நிலையில் எழுத்துக்கள் மூலம் பதிவிடப்படும் பதிவுகளின் எழுத்து உச்ச வரம்பை 280 எழுத்துக்களில் இருந்து 2 ஆயிரத்து 500 எழுத்துக்கள் என அதிகரிக்க டுவிட்டர் நிறுவனம் உத்தேசித்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.