உலகம்

உளவு செயற்கை கோளை ஏவிய ஜப்பான்.....

Malaimurasu Seithigal TV

ஜப்பான் ஐஜிஎஸ் ரேடார் 7 என்ற உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.  

வட கொரியாவில் உள்ள இராணுவ தளங்களில் நகர்வுகளைக் கண்காணிக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஜப்பான் வெற்றிகரமாக ஏவியது. 

இந்த செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் எச்2ஏ ராக்கெட் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இச்செயற்கைக்கோள் பின்னர் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்