உலகம்

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெப் ஃபெசோஸ்...

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் இன்று விலகுகிறார்.

Malaimurasu Seithigal TV
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ். இவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவார். அவர், இன்று அமேசான் சி.இ.ஓ. பதவியை விட்டு விலக உள்ளார். அவருக்கு பதிலாக ஆண்டி ஜாஸி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி தனது தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் ஜெஃப் பெசோஸ் ஈடுபட உள்ளதாகவும் அமேசானின் நிர்வாகத் தலைவராக அவர் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 1994-ம் ஆண்டு ஜெப் பெசோசால் துவங்கப்பட்டு பின் நாளடைவில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.