உலகம்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு மாற்றாக கமலா ஹாரீஸ் இருப்பார் - ஜோபைடன்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு மாற்றாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட கூடும் என அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு மாற்றாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட கூடும் என அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். முதல் கருப்பின பெண்ணும், முதல் ஆசிய அமெரிக்க பெண்ணுமான கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நியமித்தது அமெரிக்க வரலாற்றில் இது முதல் முறையாகும்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோபைடன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,  2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு மாற்றாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட கூடும் என தெரிவித்தார்.

கமலா ஹாரீஸ் அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.