உலகம்

எங்கே இப்ப கூவு... நீ தான் தைரியமான ஆளாச்சே கூவுடா... - கன்யே-வை வாயடைத்த எலான்...

பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

பிரபல அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனா். ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல முறை கிராமி விருதுகளை வென்றவர். அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார். மேலும் எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

எனவே அவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் டுவிட்டர் முற்றக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.