உலகம்

கடும் சீற்றத்துடன் காணப்படும் லா, பால்மா எரிமலை

Malaimurasu Seithigal TV

ஸ்பெயின் நாட்டில் தொடர்ந்து 3 வார காலமாக சீற்றத்துடன் காணப்படும் எரிமலையில் இருந்து தற்போது அதிக அளவில் புகை வெளியேறுகிறது.

எரிமலை சுற்றியுள்ள நகரங்களில் இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லா பால்மா எரிமலையில் இருந்து தொடர்ந்து தீ ஜூவாலைகள் வெளியேறுவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்களும், ராணுவத்தினரும் திணறி வருகின்றனர் .

எரிமலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் அருகில் உள்ள பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதால்  பதற்றம் நிலவுகிறது.