உலகம்

மடகாஸ்கர்: புயல் தாக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக உயர்வு

மடகாஸ்கர் நாட்டில் புயல் தாக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

மடகாஸ்கரின் தென்கிழக்குப் பகுதி கடலோரப் பகுதியை கடந்த 6-ம் தேதி புயல் தாக்கியது. பட்சிரை என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் மனன்ஜரி என்ற நகரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. 90 ஆயிரம் மக்கள் வீடிழந்தனர்.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு வாரங்களுக்கு முன்தான் அனா என்ற புயல் தாக்கியதில் 55 பேர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் வீடிழந்தனர். இந்தநிலையில் அடுத்த புயலின் தாக்கத்தால் உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மடகாஸ்கர் நாடு.