ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்றைய தினம் விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்குச் சென்றடைந்த அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிகோஸ் டெண்டியாஸை, சந்தித்துப் பேசினார்.
இதனை தொடர்ந்து கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதேன்ஸ் நகரில், அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிகோஸ் டெண்டியாஸ் இருவரும் திறந்து வைத்தனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், மகாத்மா காந்தியின் போதனைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.