உலகம்

கழிவு நீர் கசிந்து வருவதால் கடற்கரைகளை மூடும் அபாயம்...

அதிக அளவு கழிவு நீரானது கடற்கரை மற்றும் நீச்சல் குழங்களில் கலந்து வருவதால் அதனை மூடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Malaimurasu Seithigal TV

கலிபோர்னியா பகுதியில் பெரும் கழிவு நீர் கசிந்ததன் காரணமாக லாங் பீச் நகரம் அருகிலுள்ள கடற்கரை மற்றும் நீச்சல் குழங்களில் என அனைத்தையும் பாதுகாப்பு கருதி மூடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 மில்லியன் முதல் 4 மில்லியன் கேலன்கள் வரை கச்சா கழிவு நீரானது  டொமிங்குஸ் சேனலில் கசிய தொடங்கியதாக சொல்லப்படுகிறது.இவை லாஸ் ஏஞ்சல்ஸ் என்னும் துறைமுகத்தின் இருந்து வெளிவருவதாக அந்நாட்டு செய்தி குறிப்பின் மூலம் வெளிவந்துள்ளது.

கார்சன் என்னும் சொல்லப்படும் நகரில் இந்த கசிவு ஏற்பட்டது தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பிராதான சாலைகளில் கசிவு நீரானது சென்றது தொடர்ந்து அவை தோல்வியில் முடிந்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.இருப்பினும் அவை தோல்வியடைந்ததற்கான காரணங்கள் அறியபடவில்லை என கூறப்படுகிறது.

7 மைல்களில் உள்ள கடற்கரைகளை உள்ளடக்கிய, லாங் பீச்சில் இருந்து நகரம் வரை நீர் தர குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாசுபாடுகளின் அளவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அளவை சோதித்து வருவதாக சொல்லப்பட்டன.மேலும் மாசுவின் அளவானது இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு நீரில் நீந்துவதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அப்பகுதிக்கு சுற்றுலா வருகை தந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்ததாக கூறுகின்றனர்.மேலும் இது குறித்து கூறுகையில் இந்த பகுதிக்கு வருகை தருவோர் மணலிலும் மற்றும் கடலிலும் விளையாட முடியவில்லை என கூறிய பயணி ஒருவர் இது நியாயமாக உள்ளதா என கேள்விகளை எழுப்பியவாறு இந்த இயற்க்கை காட்சி மாற்றத்தை கண்டு களிக்க நாங்கள் மிகவும் ஆவலோடு இருந்ததாகவும் ஆனால் தற்போது இந்த பேரழிவின் காரணமாக மக்கள் வேதனை அடைந்து வருவதாக கூறப்படுகிறது.