உலகம்

இந்திய உளவு அமைப்பினர் என்னை கடத்தினார்கள்.. மெகுல் கோக்சி குற்றச்சாட்டு...

தன்னை இந்திய உளவு அமைப்பினர், கடத்தி தாக்கியதாக பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி குற்றம்சாட்டியுள்ளார்.

Malaimurasu Seithigal TV
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு ஆண்டிகுவாவுக்கு தப்பிச் சென்றவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. சமீபத்தில் டெமினிகாவில் இருந்து சட்டவிரோதமாக கியூபா தப்பிக்க முயன்றபோது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோக்சியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டதால் அவர் தற்போது ஆண்டிகுவாவில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவிலிருந்து ரா உளவு அமைப்பை சேர்ந்த குர்மித் சிங் மற்றும் குர்ஜித் பண்டால் ஆகிய 2 அதிகாரிகள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார்.  அவர்கள் தங்களை ரா அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டதாக கூறிய அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.