உலகம்

"நிஜ்ஜார் வழக்கை விசாரிக்கத் தயார்" அமைச்சர் ஜெய்சங்கர்!!

Malaimurasu Seithigal TV

நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடா பகிர்ந்தால், அதை விசாரிக்க தயார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஐந்து நாள் அரசு முறைப்  பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனடாவில் இந்தியாவின் தூதர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாகவும் அதன் காரணமாகவே கனடா நாட்டிற்கான விசா சேவையை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.

கனடா அரசுடன் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்த ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை என்று கூறினார்.

வியன்னா தீர்மானத்தின் படி ஒவ்வொரு நாடும் அந்நாட்டில் உள்ள பிற நாடுகளின் தூதரகத்திற்கு பாதுகாப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறிய ஜெய்சங்கர், ஆனால் கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு  சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் போராட்டக்காரர்களால் மிரட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.