உலகம்

இன்னும் கொரோனாவே முடியலப்பா… குரங்கு வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஒருவர் பலி!

சீனாவில் முதன்முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதார்.

Malaimurasu Seithigal TV

சீனாவில் முதன்முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதார்.

சீனாவில் குரங்கு பி வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 53 வயதான ஆண் கால்நடை, விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்றும், இறுதியில் கடந்த மே 27-ம் தேதி இறந்தார் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.