உலகம்

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை... தேதி ஒத்திவைப்பு!!

Malaimurasu Seithigal TV

நாகையிலிருந்து இலங்கைக்கு இன்று தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை 10 ஆம் தேதி தொடங்க உள்ள இருந்த நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. 

பயணிகள் இல்லாமல் கப்பலில் கேப்டன் பிஜு பி.ஜார்ச் தலைமையில் 14 ஊழியர்கள் சோதனை ஓட்டத்திற்காக கப்பலில் பயணம் செய்தனர். 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன்துறையை சென்றடைந்த கப்பல் மீண்டும் மாலையில் நாகை துறைமுகம் வந்து சேர்ந்தது.அதிகாரபூர்வமாக அக்டோபர் 10 ம் தேதி (இன்று) பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்தது. 

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் தொடக்க விழாவில் பங்கேற்பதாக வெளியான தகவலையொட்டி, நாளை நாகை துறைமுகத்திலிருந்து காங்கேயன் துறைமுகத்திற்கு செல்ல இருந்த செரியாபாணி கப்பல் துவக்க விழா பயணம் தேதி மாற்றம் செய்யப்பட்டு 12ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுவரை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்வதற்கு 10 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 12 ஆம் தேதிக்கு மாற்றபட்டது பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.