உலகம்

பேக்கர், ஹவ்லேண்ட் தீவுகளில் கடைசியாக பிறந்தது 2023...

Malaimurasu Seithigal TV

ஜி.எம்.டி எனப்படும் உலகின் மையப்புள்ளிக்கு ஏற்றாற்போல அனைத்து நாடுகளுக்கும் தினம் மற்றும் நாழிகைகள் கணிக்கப்பட்டு அந்துள்ளது. குறிப்பாக சூரிய உதயத்தை வைத்தும் ஒரு நாளின் தொடக்கம் உருவாகியுள்ளது. அந்த வகையில், இந்த உலகிலேயே புத்தாண்டை கடைசியாக ஒரு தீவு கொண்டாடியுள்ளது.

உலகில் கடைசியாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. பேக்கர் தீவு நிலநடுக்கோட்டிற்கு சற்று வடக்கே மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைத் திட்டாகும்.

இது ஹொனலுவிலிருந்து 3 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தொலைவில், ஹவாய், ஆஸ்திரேலியாவிற்கு இடையே சரிபாதியில் அமெரிக்க ஆளுமையின் கீழ் உள்ளது. உலகில் கடைசியாக இங்கு தான் புத்தாண்டு பிறக்கிறது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது மணியளவில் 2023 ஆம் ஆண்டு பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் உலகில் கடைசியாக பிறந்தது.