உலகம்

புத்தாண்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு....ஆப்கானிஸ்தானில் தொடரும் குண்டுவெடிப்பு...!!!

காபூல் ராணுவ விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.  பலர் உயிரிழந்ததாக தகவல்.

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. தலிபான் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தெரிவிக்கையில், இராணுவ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.  இந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அவர்களால் வெளியிடப்படவில்லை. 

இதற்கு முன்னதாக புதன்கிழமை, ஆப்கானிஸ்தானின் தாலுக்கான் நகரில் இதேபோன்ற குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.  இங்கு ஒரு ஊழியரின் மேஜைக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக தலிபான் பாதுகாப்புத் தளபதி அப்துல் முபீன் சைஃபி தெரிவித்திருந்தார். 

-நப்பசலையார்