உலகம்

நோபல் விழா; ரஷ்யாவுக்கு அழைப்பு மறுப்பு....!

Malaimurasu Seithigal TV

நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி நோபல் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்களுக்கு நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாது என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.