உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு...யார் அந்த 3 பேர்?

Tamil Selvi Selvakumar

2022ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல்  பரிசு மூன்று  விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்று நோபல் பரிசு. இந்த பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி என உலகின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த முறை இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்.

குவாண்டம் தகவல் அறிவியலில் பல்வேறு சாதனைகள் படைத்ததற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி அலெய்ன் அஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பிரான்சிஸ் க்ளாஸர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் ஜெய்லிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ரோயல் அகாடமி ஆஃப் ஸ்வீடன் விரைவில் அறிவிக்க உள்ளது. தொடர்ந்து மற்ற துறைகளுக்கான பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக, நேற்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.