உலகம்

ஒரு கிலோ வாழைப்பழம் 3,300 ரூபாய்,. இரு நாளுக்கு ஒருமுறையே உணவு.! கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் வடகொரியா.!  

Malaimurasu Seithigal TV

கொரோனா சூழ்நிலை காரணமாக வடகொரியா கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.  

உள்ளே என்ன நடக்கிறது என்பதே வெளியே தெரியாமல் இருக்கும் நாடு எது என்றால் அது வடகொரியா தான். வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிய செயற்கைகோள் புகைப்படங்கள் மட்டுமே ஒரேவழியாக இருந்தது. உலகெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று கிம் ஜாங் உன் கூறி வந்தார்.

மேலும் வடகொரியாவுக்கு தேவையான உணவு பொருள்கள், மருந்துகள் அனைத்தும் சீனா வழியாகவே வடகொரியா சென்றது. கொரோனா காரணமாக சீனாவால் போதிய உணவு பொருள்களை வடகொரியாவுக்கு அனுப்பமுடியாத நிலை இருந்து வந்தது. இதை குறிப்பிட்டு வடகொரியா கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.  

கிடைத்த தகவலின் படி அங்கு முதன்மை உணவுப்பொருள்களான சோளம், அரிசி போன்றவற்றிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு தற்போது ஒரு கிலோ வாழைப்பழம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.