உலகம்

இப்போது அல்ல, 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா இருக்கிறது.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Malaimurasu Seithigal TV

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் இருந்ததாகவும், அது மாற்றமடைந்து வருவதாகவும் கரண்ட் பயாலஜி என்ற ஆய்வு இதழ் ஒன்று கட்டுரையை வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி அது உருமாற்றடைந்து மேலும் தீவிரமானதாக மாறி வருகிறது. இதன் காரணமாக கொரோனா பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் கரண்ட் பயாலஜி என்ற ஆய்வு இதழில் வெளிவந்த கட்டுரை உலகம் முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. அந்த கட்டுரையில் கொரோனா வைரஸ் இப்போது அல்ல, 20,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததும் என்றும், சீனா ஜப்பான் வடகொரியா தென்கொரியா போன்ற  மேற்கு ஆசிய நாடுகளில் அது பரவியிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து குயின்ஸ்லாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த போது கொரோனா மரபணுக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனால் கரண்ட் பயாலஜி இதழில் கூறப்பட்டிருப்பது உண்மைதான் என்றும் அந்த பல்கலைக்கழகம் கூறியுள்ளது.