உலகம்

இலங்கை மாணவர்களுக்கு உதவிய சீன மக்கள்... 1,000 மெட்ரிக் டன் அரிசி நன்கொடை!!

இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இலங்கை சென்றடைந்தது.

Suaif Arsath

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், சீன மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொண்ட கொள்கலன் இலங்கை வந்தடைந்தது. இது மாணவர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை இலங்கையின் கல்வித்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள 7 ஆயிரத்து 900 பள்ளிகளுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை சீனா அன்பளிப்பாக வழங்க உள்ளதாக கொழும்புவில் உள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்த உதவியை நீட்டிப்பதாகவும் கூறியுள்ளது.