உலகம்

பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு தண்டனை - சீனா அதிரடி சட்டம்

பிள்ளைகள் செய்யும் தவறுக்கு பெற்றோரை தண்டிக்கும் வகையிலான சட்ட முன்வடிவை சீனா பரிசீலித்து வருகிறது.

Malaimurasu Seithigal TV

பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கத்தை கற்றுக் கொடுத்து வளர்ப்பது பெற்றோரின் கடமை. அந்த கடமையை பெற்றோர் செய்ய தவறும் பட்சத்தில், பிள்ளைகள் செய்யும் தவறுக்கு பெற்றோரை தண்டிக்கும் வகையிலான புதிய சட்டம் சீனா நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பிள்ளைகளின் ஒழுக்ககேடான செயலுக்கு பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

இதுகுறித்து பேசிய சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சட்டமன்ற விவகார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் Zang Twewei, பிள்ளைகளிடையே நல்லொழுக்கத்தை கற்பிக்கும் அதேவேளையில் பிள்ளைகள் ஓய்வெடுப்பதற்கும், விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் ஊக்குவிக்க வேண்டும் என கூறினார்.