உலகம்

சூறாவளி மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...!!

Malaimurasu Seithigal TV

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி மற்றும் கனமழையால் மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி மற்றும் கனமழையால் மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.  மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. 

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மட்டுமின்றி, சான் பிரான்சிஸ்கோ, ஓக்லேண்ட், சாக்ரமெண்டோ, ஸ்டாக்டன் மற்றும் பிரெஸ்னோ ஆகிய நகரங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.