உலகம்

அணிவகுத்து செல்லும் நண்டுகளுக்கு, வழிவிட்டுச்செல்லும் மக்கள்...

Malaimurasu Seithigal TV

கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிவப்பு நண்டுகள், தங்களது வருடாந்திர வலசை பயணத்தை தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவில், சிவப்பு நண்டுகள் உள்ளன.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக இந்த சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கின்றன.

இந்நிலையில், நண்டுகள் பாதுகாப்பாக கடலுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் பாதை அமைத்து, நண்டுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.