சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காயில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இரண்டரை கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காயில் நீண்ட நாட்களாக ஊரடங்கு நீடித்து வருவதால் மக்கள் எரிச்சலும் விரக்தியும் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி நடமாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விதிகளின்படி அனுமதி அட்டை பெற்றவர்கள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.