உலகம்

கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள் - ஆய்வில் புதிய தகவல்

கொரோனா வைரசால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா வைரசால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் ஆண்டிவைரல் மாத்திரையின் பரிசோதனை முடிவுகள், பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்நுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் கொண்டதாக தரவுகள் காட்டுகின்றன.

ஆண்டிவைரல் மாத்திரையுடன் பைசர் நிறுவன கொரோனா எதிர்ப்பு மாத்திரையை எடுத்துக்கொண்ட நோயாளிகளில் 89 சதவீதம் பேருக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு அபாயம் குறைந்து இருப்பதாக, பைசர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.

இந்த மருந்தை உட்கொண்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், 775 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.