உலகம்

72 பேருடன் சென்ற விமானம் விபத்து - குறைந்தது 68 பலி என கணிப்பு...

Malaimurasu Seithigal TV

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு 68 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட 72 பேருடன் சென்ற எட்டி விமானம் (Yeti Airlines) ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 32 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.

தற்போது குறைந்தது 68 பேர் இறந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுவதாக் அதகவல்கள் வெளியாகியுள்ளன.