பங்களாதேஷ் நெருக்கடி இலங்கையைப் போன்ற நிலையை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டதைப் போல ஒருபோதும் பங்களாதேஷ் மூழ்காது என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
பங்களாதேஷின் தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47 ஆவது நினைவு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையைப் போன்று பங்களாதேஷிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின்சாரம், தண்ணீர் கட்டண அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.அத்துடன், அனைத்து உலகளாவிய சவால்களைகடந்து தொடர்ந்து முன்னேறும் என்றும், இதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பு எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும், எனினும் தமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.