உலகம்

பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!

பிரபல பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Suaif Arsath

அமொிக்காவை சோ்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் நேற்று நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா் ஜேசன் எந்தவித அழைப்பும் இன்றி அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் பிரிட்னி ஸ்பியர்சி திருமண நிகழ்வுகளை ஜேசன் தனது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்ததால் பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் தனது திருமணத்தின் நிகழ்வுகளை பிரிட்னி ஸ்பியர்ஸ் இணையத்தில் வெளியிட தற்போது வைரலாகி வருகிறது.