உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 2 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தோனேசியா வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்கா புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. அச்சமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.