உலகம்

அதிபர் ஜோ பைடன் அரசுக்கு இனி ஆதரவு இல்லை- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் திட்டவட்டம்

Suaif Arsath

அதிபர் ஜோ பைடன் அரசுக்கு எதிராக விமர்சன கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், வரும் தேர்தல்களில்  ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது அமெரிக்க அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதுண்டு.

குறிப்பாக பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, தொழிற்சங்கத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச்சலுகைகள் வழங்குவது போன்றவற்றால் ஆத்திரத்தில் உள்ள அவர்  ஜோ பைடனை விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில், ஆளும் ஜனநாயக கட்சி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி டுவிட் செய்துள்ள எலான் மஸ்க், இதுவரை அந்த கட்சி கருணை உள்ளது என நினைத்து வாக்களித்து வந்ததாகவும், வரும் தேர்தல்களில் ரீப்பப்ளிக் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பேன் எனவும், அதுமட்டுமின்றி ஜனநாயக கட்சிக்கு எதிரான மோசமான பிரச்சாரத்தை வரும் நாட்களில் காண்பீர்கள் எனவும் சூளுரைத்துள்ளார்.