உலகம்

ஆடையில் சிறுநீர் கழித்த அதிபரும் கைது செய்யப்பட்ட ஆறு பேரும்....

Malaimurasu Seithigal TV

தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் வீடியோ வெளியிட்ட செய்தியாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான், 2011-ம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர்.  இவர் கடந்த மாதம் தலைநகர் ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் திடீரென ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.  இந்த வீடியோ வெளிட்டதாக கூறி செய்தியாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

-நப்பசலையார்