உலகம்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி!

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.

Tamil Selvi Selvakumar

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு, ஜெர்மனியின் ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, 'ஜி-7' உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச உள்ளார்.