உலகம்

இளவரசியாக தனது கடைசி பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பான் இளவரசி...

காதலுக்காக தன்னுடைய அரச குடும்பத் தகுதியையே விட்டுக்கொடுக்கும் ஜப்பான் இளவரசி மகோ, இளவரசியாக தனது கடைசி பிறந்தநாளை கொண்டாடினார்.

Malaimurasu Seithigal TV

பல ஆண்டு கால சர்ச்சைக்குப் பிறகு ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ, தன்னுடைய வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்கள் வருகிற 26ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பான் இளவரசி மாகோ தனது 30வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதுவே ஜப்பான் இளவரசி என்ற பட்டத்துடனும், அரச குடும்ப பாரம்பரிய முறைப்படியும் அவர் கொண்டாடும் கடைசி பிறந்த நாளாகும். திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி அமெரிக்காவில் குடியேறவிருப்பதாக கூறப்படுகிறது.