உலகம்

லட்சதீவில் பொதுமக்கள் நுழைய தடையா...காரணம் என்ன?!!

Malaimurasu Seithigal TV

லட்சத்தீவு நிர்வாகம் மொத்தமுள்ள 36 தீவுகளில் 17 தீவுகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி தடை விதித்துள்ளது. இந்த 17 தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.

லட்சத்தீவு நிர்வாகம் வியாழன் அன்று மொத்தமுள்ள 36 தீவுகளில் 17 தீவுகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி தடை விதித்துள்ளது. இந்த 17 தீவுகள் மக்கள் வசிக்காதவை மற்றும் அவற்றைப் பார்வையிட துணைப் பிரதேச மாஜிஸ்திரேட்டின் நுழைவு அனுமதி தேவை எனவும் அறிவித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144ன் கீழ், லட்சத்தீவு மாவட்ட நீதிபதி  இது தொடர்பாக முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாத அல்லது கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த தீவுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதக் குழுக்கள் அல்லது அமைப்புகள் நாட்டின் முக்கியமான நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தாக்கி சேதப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

-நப்பசலையார்