ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கும் முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் இணையதளத்தில் வைரலானது. டோக்கியோவிற்கு வெளியே உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில், பஞ்ச் என்ற குட்டி ஜப்பானிய குரங்கு மற்றும் அதன் தோழனான பொம்மை ஒராங்குட்டான் ஆகியவை பிரிக்க முடியாத ஜோடியாக இணையதளத்தில் வலம்வந்தது.
ஏழு மாதங்களுக்கு முன்பு இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் பஞ்ச் பிறந்துள்ளது. அதன் தாய் குரங்கு தனது குட்டியை அரவணைக்காமல் தனிமையில் கைவிட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் சுற்றி திரிந்த பஞ்ச், தன் சக குரங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்பட்டது.. சக குரங்குகளால் நிராகரிக்கப்பட்ட பிறகு, மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் அதைத் தங்கள் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். ஜப்பானிய குரங்கு குட்டிகள் பொதுவாக தசை வலிமையை வளர்த்துக் கொள்வதற்கும், பாதுகாப்பு உணவிற்காகவும் தங்கள் தாய் குரங்குகளை பற்றிக்கொள்ளும் இந்த தொடுதல் அரவணைப்பு பஞ்ச்-க்கு தேவைபட்டது. இத அறிந்த பராமரிப்பாளர் கோசுகே ஷிகானோ பஞ்சுக்கு ஒரு உடனடித் தலையீடு தேவைப்படுகிறது என்று கூறியள்ளார்.
அதனை தொடர்ந்து பஞ்ச் - க்கு ஒரு பொம்மை கொடுக்க பட்டது. அது பார்ப்பதற்கு ஒரு வகை குரங்கு போலவே இருக்கும். பற்றி கொள்வதற்கு ஏதுவாக இருந்த அந்த குரங்கு பொம்மையை பார்த்த பஞ்ச் தனக்கு ஒரு நண்பன் கிடைத்ததை போலவே உணர்ந்தான். இந்தப் பொம்மைக்கு ஓரளவு நீளமான முடியும், பிடிப்பதற்கு எளிதான பல இடங்களும் உள்ளன," என்று ஷிகானோ கூறினார். "இது குரங்கைப் போல் இருப்பதால், பிற்காலத்தில் பஞ்ச் மீண்டும் குழுவில் இணைவதற்கு இது உதவக்கூடும் என்று பராமரிப்பாளர்கள் கருதியுள்ளனர்.
அதன் பின் பஞ்ச் அந்த பொம்மை இல்லாமல் அரிதாகவே காணப்பட்டான். தன்னை விடப் பெரியதாக இருந்தபோதிலும், அந்த மென்மையான பொம்மையை அவன் எல்லா இடங்களுக்கும் இழுத்துச் சென்றான். அதை தன்னைப் போல் ஒரு உயிராகவே கருதி வந்தான். பஞ்ச்-ன் இந்த செயல்கள் அடங்கிய காணொளிகள் இணையத்தில் வைரல் ஆனதையடுத்து பலரும் பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சிலர் தங்களை பஞ்ச் இடத்தில வைத்து பார்ப்பதாகவும் சிலர் அதன் நிலை குறித்து வருத்தப்படுவதாகவும் இன்னும் சிலர் அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பகிர்ந்து கருது தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து பலரும் அவனை பார்க்க மிருகக்காட்சிசாலைக்கு படை எடுத்தனர். மிருகக்காட்சிசாலைக்குக் குவிந்த ரசிகர்களை அவன் மகிழ்வித்து வருந்தான்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்த காணொளிகளில், பஞ்ச் குரங்கு, மோமோ-சான் என்ற பெண் மாகாக் குரங்குடன் விளையாடுவதும், அதைக் கொஞ்சுவதும், முத்தமிடுவதுமாக காணப்படுகின்றது. இந்த ஜோடி குதிப்பது, துரத்தி விளையாடுவது , ஒன்றையொன்று சீர்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற மகிழ்வாக இருந்து வருகின்றன. பஞ்சின் பொம்மையும் அந்தக் காணொளிகளில் தோன்றுகிறது. மேலும் முன்பைபோல் பொம்மையுடன் சுற்றுவது இல்லையாம், சகா குரங்குகளுடன் விளையாட பழகி உள்ளன் பஞ்ச்.
"அவன் வளர்ந்து அந்த மென்மையான பொம்மையிலிருந்து வெளியேறும்போது, அது அவனது சுதந்திரத்தை ஊக்குவிக்கும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என பராமரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது இந்த காணொளியையும் பகிர்ந்து பைனலி பஞ்ச் ஹாப்பி என்றும் இணையவாசிகள் தங்கள் கருத்தையும் மகிழ்வையும் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் “பஞ்ச் க்கு கேர்ள்பிரண்ட் கிடைச்சாச்சு 90ஸ் கிட்ஸ்-க்கு இன்னும் கேர்ள்பிரண்ட் இல்லை’ என்றும் மீம் போட்டு வருகிறார்கள.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.