உலகம்

ராகுல் வழக்கு... நாளை விசாரணை...!!

Malaimurasu Seithigal TV

இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல்காந்தியின் மேல்முறையீடு வழக்கு, நாளை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு ராகுல்காந்தி உரையாற்றிய நிலையில், மோடி சமூகத்தினரை அவமதித்து விட்டதாக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டும், அவரது எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக ராகுல்காந்திக்கு உத்தரவிட்ட மக்களவை செயலகம், அரசுக் குடியிருப்பை காலி செய்யுமாறும் நோட்டீஸ் அனுப்பியது.  தொடர்ந்து ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.