உலகம்

தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ஏன்?

Malaimurasu Seithigal TV

இலங்கையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசு அமைப்பது தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பல கட்சிகள் இன்று தனித்தனியாக இலங்கை ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளன. அதிபர் அலுவலகத்தில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதிபருடன் மனோ கணேசன் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கூட்டணியின் தலைவருமான  மனோ கணேசன் தலைமையில் இவர்கள் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

தமிழ்-முஸ்லிம் கட்சிகளுடன் அதிபர் சந்திப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனும் இன்று ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் தலைமையில் ஒரு குழுவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புக்களின் போது அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசு அமைப்பது தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.