உலகம்

முகக்கவசம் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு - ஏராளமான மக்கள் பேரணி

முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு...!

Tamil Selvi Selvakumar

அமெரிக்காவில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு மக்கள் பேரணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முகக்கவசம் அணிவது குறித்து, அமெரிக்காவில் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதிபர் ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கட்சி முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துகிறது.

அதேசமயம், குடியரசுக்கட்சி முன்னிலையில் இருக்கும் பல மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், ஜனநாயகக்கட்சி ஆட்சியில் இருக்கும் கலிபோர்னியா போன்ற மாகாணங்களில், உள்ளரங்குகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் தனிநபரின் விருப்பமாக இருக்கவேண்டும் என்றும், கட்டாயமாக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் பேரணி நடத்தினர்.