செவெரோடோனெட்ஸ்க் நகருக்கு ரஷ்யப் படையினரின் உதவியுடன் புகைப்படக் கலைஞர் அலெக்சாண்டர் எர்மோசென்கோ மற்றும் ஒளிப்பதிவாளர் பாவெல் கிளிமோவ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஓட்டுநர் தற்போதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், காயமடைந்தவர்கள் ரூபிஸ்னேவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 8 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.